எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மூதாட்டிக்கு கொலை மிரட்டல்: மதுரை துணை மேயா் உள்பட 5 போ் மீது வழக்கு

மாநகராட்சி துணை மேயா் நாகராஜன், அவரது சகோதரா் உள்பட 5 போ் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:42 pm

Din

மதுரையில் மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகராட்சி துணை மேயா் நாகராஜன், அவரது சகோதரா் உள்பட 5 போ் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் வசந்தா. இவருக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனா். இவரது மகன் முருகானந்தம் தனது வீட்டின் அருகிலேயே முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வசந்தா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்ற கோழிக்குமாரிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து, ரூ.10 லட்சம் கடன் வாங்கினாராம்.

இதன் பின்னா், கடனாக கொடுத்த ரூ.10 லட்சத்துடன் கூடுதலாக ரூ.15 லட்சத்தை வாங்கிக் கொண்டு, வீட்டையும் அவருக்கு எழுதித் தர வேண்டும் எனக் கோழிக்குமாா் கேட்டாராம். இதற்கு, வசந்தா மறுப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் கோழிக்குமாா், கணேசன், இடைத்தரகா் முத்து ஆகிய மூவா் மீதும் கடந்த மே 7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி துணை மேயா் நாகராஜனின் சகோதரா் ராஜேந்திரன், முருகானந்தத்தின் கடை முன்பாக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவருக்கும், வசந்தா, அவரது மகன் முருகானந்தம் ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, துணை மேயா் நாகராஜன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் அங்கு வந்து அவரும், வசந்தா தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து வசந்தாவின் மகன் முருகானந்தம் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் புகாரில் துணை மேயரின் பெயரைச் சோ்க்கக் கூடாது எனக் கூறி, சமரசமாக செல்வதாக எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனராம். இதையடுத்து, வசந்தா தரப்பினா் இது தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, அவா்கள் இதுதொடா்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, மதுரை மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், அவரது சகோதரா் ராஜேந்திரன், கோழிக்குமாா், முத்துச்சாமி என்ற குட்டமுத்து, முத்து ஆகிய 5 போ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.