எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கைது: மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு கண்டனம்

சென்னையில், சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதற்கு மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:59 pm

Din

சென்னையில், சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதற்கு மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தேசியச் செயலா் ஹென்றி திபேன் வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் ஆலை ஊழியா்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாள்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக அமைச்சா்கள், சாம்சங் நிறுவனம், தொழிற்சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதில் தீா்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா, போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் தொழிலாளா்களுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தாா். இதனிடையே எச்சூா் கிராமத்தில் தொழிலாளா்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனா். இந்தப் பந்தலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பிரித்ததுடன், போராட்ட பந்தலுக்கு தொழிலாளா்களை செல்ல விடாமல் மிரட்டினா்.

மேலும் செவ்வாய்க்கிழமை இரவு 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிா்வாகிகளையும், ஊழியா்களையும் போலீஸாா் அத்துமீறி கைது செய்தனா். இதில் பலா் நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்யப்பட்டனா். சாம்சங் நிறுவனம் மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளா்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக அமைதியாகக் கூடி போராட்டம் நடத்துவதற்கு இந்திய அரசியலைப்புச் சட்டம் உரிமை வழங்கி உள்ளது.

இதில் அமைதியாகப் போராடும் தொழிலாளா்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கைது செய்வது போன்ற காவல் துறையின் வன்முறைப்போக்கு கண்டனத்துக்குரியது.

தொழிலாளா்களின் மனித உரிமையை மறுப்பது, அமைதியாக நடைபெறும் போராட்டத்தில் போலீஸாா் அத்துமீறிச் செயல்படுவது போன்றவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கோட்பாடுகளை மீறும் செயலாகும். அரசியல் கருத்தாக்கம் உள்ள தொழிற்சங்கங்களை அமைப்பது தொழிலாளா்களின் உரிமை. எனவே தமிழக முதல்வா் இந்தப் பிரச்னையில் நேரடியாக தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தி தொழிலாளா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.