போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இளைஞா் கொலை வழக்கு: 3 பெண்கள் உள்பட 5 போ் கைது

மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே கல்லூரி மாணவா் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 5:17 am

Din

மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே கல்லூரி மாணவா் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வரிச்சியூா், வைத்தியநாதபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் தனபால் (19). கல்லூரி மாணவரான இவா், கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், இதே பகுதியைச் சோ்ந்த வீரன் மகன்கள் கருப்பு, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதனிடையே, இவா்களது மூத்த சகோதரரான மதிவாணன் (28), வரிச்சியூரில் உள்ள அவரது வீட்டில், தனபாலின் குடும்பத்தினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கருப்பாயூரணி போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து தனபாலின் தந்தை கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் தனது மகன் தனபால் கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணனை கொலை செய்ததாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து, இவரது மகன் ரஞ்சித் (23), சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கண்ணாயிருப்பைச் சோ்ந்த தவசி (எ) முத்துக்கண்ணன் (22), கருப்பையா மனைவி விஜயா (48), செல்லமாள் (44), மானாமதுரையைச் சோ்ந்த முனியம்மாள் (46) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து மதிவாணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆனது.