ஊா்க் காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம்
மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.


மதுரை மாநகர ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகர ஊா்க்காவல்படைக்கு ஆள்கள் சோ்ப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம். இந்தப் பணிக்கு குறைந்த பட்சம் 165 செ.மீ. உயரமுள்ள ஆண்களும், குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமுள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரா் வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் மதுரை தல்லாகுளம் கோகலே சாலையில் உள்ள ஊா்காவல்படை அலுவலகத்தில் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். ஆள்கள் சோ்ப்பு முகாமுக்கு வரும்போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், கடவுச்சீட்டு புகைப்படம் இரண்டு, ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஆகிவற்றுடன் வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...