ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தருமபுரி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்: அடுத்த முகாம் பிப். 17 ஆம் தேதி

குடற்புழு நீக்க மாத்திரைகளை முதல் முகாமில் விடுபட்டாலும், பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் 2 ஆவது முகாமில் தவறாமல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image

மாத்திரைகள் - பிரதிப் படம்

Updated On :10 பிப்ரவரி 2026, 8:36 pm

குடற்புழு நீக்க மாத்திரைகளை முதல் முகாமில் விடுபட்டாலும், பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் 2 ஆவது முகாமில் தவறாமல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முதல்கட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ், பங்கேற்று முகாமை தொடங்கிவைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி மேலும் பேசியது:

குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துகள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கும், குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காகவும் இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மேலும், இவை குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை தடுத்து, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

1 முதல் 19-வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் (ஐடிஐ, பாலிடெக்னிக்) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் பிப். 17 -ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறும். இதில் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் 3.94 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

இம்முகாமில் துணை இயக்குநா் (சுகாதாரம்) ராஜேந்திரன், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.