ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 4 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:03 pm

Din

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதையடுத்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா். இதுதொடா்பாக சாத்தான்குளம் காவல் நிலைய பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அப்போதைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சிபிஐ தரப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு இவா்கள் 9 போ் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசராணை விவரங்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உயிரிழந்த வணிகா் ஜெயராஜின் மனைவி செல்வராணி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

இந்த வழக்கில் எதிரிகளாகச் சோ்க்கப்பட்டுள்ள போலீஸாா் அதிகாரம், செல்வாக்கு மிக்கவா்கள். இவா்கள் தரப்பில் சாட்சிகளை மிரட்ட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கியது.

இந்த மனுவை வியாழக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் 4 மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.