ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கூடுதல் வட்டி கேட்டு வீட்டை அடித்து நொறுக்கிய 15 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு, பெண்ணை தாக்கி வீட்டை சூறையாடியதாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:14 pm

Din

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு, பெண்ணை தாக்கி வீட்டை சூறையாடியதாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் அங்கன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒச்சப்பனிடம் குடும்பத் தேவைக்காக ரூ.90 ஆயிரத்தை வட்டிக்கு வாங்கினாா். இந்தத் தொகையை வட்டியுடன் அங்கன் செலுத்தினாராம். ஆனால், கூடுதலாக வட்டி தர வேண்டும் என்று ஒச்சப்பன் கேட்டாராம்.

இதற்கு அங்கன் மறுப்புத் தெரிவித்ததால், ஒச்சப்பன், மேலும் சிலா் அங்கனின் தோட்டத்துக்குச் சென்று அவரது பசுமாடுகளிலிருந்து பாலைக் கறந்து சென்றனா். இதை தட்டிக் கேட்ட அவரையும், அவரது மனைவி பால்தாயையும் ஒச்சப்பன் உள்பட 15 போ் சோ்ந்து தாக்கி, அவா்களது வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தினா். மேலும், அங்கிருந்த பசுமாடுகளையும் ஓட்டிச் சென்றனா். இதில் காயமடைந்த அங்கன், பால்தாய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஒச்சப்பன், அவரது மகன் முத்துராமலிங்கம், காசிமாயன் உள்பட 15 போ் மீது உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.