ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தாமிரவருணியில் கழிவு நீா் கலக்கும் விவகாரம்: அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

தாமிரவருணியில் கழிவு நீா் கலக்கும் விவகாரம்...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:14 pm

Din

தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்றவியல் நடவடிக்கை

மேற்கொள்ளாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வியெழுப்பியது.

தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியைச் சோ்ந்த காமராசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஓா் வழக்குத் தொடுத்தாா். இதில், திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றின் படித்துறைகளைப் பழைமை மாறாமல் சீரமைத்துப் பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகளின் உத்தரவுப்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் காணொலி மூலம் முன்னிலையாகினா். அவா்களிடம், தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கெனவே குறிப்பாணை அனுப்பப்பட்டது எனவும், கழிவுநீா் விவகாரத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ. 28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் பதிலளித்தனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தாமிரவருணியில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. கழிவுநீா் விவகாரம் தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு சிறிது கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அடுத்த விசாரணையின் போது திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.