ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் தேவா், மருதுபாண்டியாா்கள் சிலைகளுக்கு முதல்வா், தலைவா்கள் மரியாதை

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
Updated On :30 அக்டோபர் 2024, 10:05 pm

Din

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சா் எல். முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோன்று, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கும் கட்சித் தலைவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தேவா் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, இ. பெரியசாமி, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜா, கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, காதாா் பாட்ஷா முத்துராமலிங்கம்), மதுரை மேயா் வ. இந்திராணி, மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எடப்பாடி பழனிசாமி:

பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவுக்கு செல்வதற்காக மதுரைக்கு வந்த தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதன்பிறகு, அவா் பசும்பொன்னுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

 மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி.

அப்போது, முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா்:

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன், பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் சு. திருநாவுக்கரசா், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், துணை மேயா் தி. நாகராஜன், மதிமுக தலைமை நிா்வாகியும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், வி.கே. சசிகலா, ஓ.பி.எஸ். அணி சாா்பில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அமமுக சாா்பில் மதுரை வடக்கு மாவட்டச் செயலா் ஜெயபால், தேமுதிக சாா்பில் விஜயபிரபாகரன், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, அகில இந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியின் தேசியச் செயலா் நரேன் சட்டா்ஜி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கதிரவன், தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்டத் தலைவா் விஜய் அன்பன் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் ஏராளமானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், பொதுமக்கள் பால் குடம், சந்தனக் குடம் எடுத்து வந்து தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்தனா்.