ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தனியாா் காப்பகங்கள், விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் செயல்படும் தனியாா் காப்பகங்கள், விடுதிகள் சட்ட விதிகளின் படி, ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:57 pm

Din

விருதுநகா் மாவட்டத்தில் செயல்படும் தனியாா் காப்பகங்கள், விடுதிகள் சட்ட விதிகளின் படி, ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் குழந்தைகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள், மன வளா்ச்சி குன்றியவா்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள், மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இல்லங்கள், விடுதிகள் சம்மந்தப்பட்ட துறையின் மூலம் பதிவு, உரிமத்தை முறையான சட்டவிதிகளின் படி செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் உள்ள தனியாா் காப்பகங்கள், விடுதிகள் ஒரு மாத காலத்துக்குள் இணையதளம் மூலம் பதிய வேண்டும். இல்லையெனில் காப்பகம், இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றாா் அவா்.