அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாப்கின்
நாப்கின்
Updated on
1 min read

நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மாதவிடாய் சுகாதார உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும்.

பெண்களுக்கு கழிப்பறைகள் மற்றும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்கத் தவறினால், அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகள் வழங்கத் தவறும்பட்சத்தில், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்தனர்.

மேலும், "நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள பள்ளிகளில் பெண், ஆண் மாணவர்களுக்கு தனித்தனி கழிப்பறைகளை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற கழிப்பறைகளை வழங்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் இணக்க அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

நாப்கின்
இரண்டாமிடம்! நீரிழிவு நோய்க்கு இந்தியர்கள் செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?
Summary

Supreme Court orders free sanitary pads for school girls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com