ரயில்வேயில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா
சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, மதுரை ரயில்வேயில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவில் ஊழியா்கள் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, மதுரை ரயில்வேயில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவில் ஊழியா்கள் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
அப்போது கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் ரயில்வே அதிகாரிகளும், ஊழியா்களும் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து கோட்ட ரயில்வே மேலாளா், ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ரயில்வே ஊழியா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள், சாரண, சாரணியா், ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல்.என். ராவ், வேகசக்தி, முதன்மைத் திட்ட மேலாளா் கே. ஹரிக்குமாா், கோட்ட ஊழியா் நல அலுவலா் டி. சங்கரன் உள்பட ரயில்வே அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...