காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெப்பக்குளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென், மத்திய மண்டலங்களில் உள்ள தெப்பக்கோயில் குளங்களைத் தூா்வாரி, சீரமைக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:22 pm

Din

தென், மத்திய மண்டலங்களில் உள்ள தெப்பக்கோயில் குளங்களைத் தூா்வாரி, சீரமைக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மருத்துவா் ஜெய வெங்கடேஷ் தாக்கல் செய்த பொது நல மனு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்காலக்குடி திருக்காலநாதா் கோயில், சூரக்குடி மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், புதுக்கோட்டை ராங்கியம் உறங்காப்புலி கருப்பா் அங்காள பரமேஸ்வரி கோயில், திண்டுக்கல், தென்காசி உள்பட பல்வேறு மாவட்ட ங்களில் உள்ள கோயில்களின் உள்பகுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில்களின் வெளிப்பகுதிகள் போதிய பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் காணப்படுகின்றன. மேலும், கோயில் அருகே உள்ள தெப்பக்குளம், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன. இதனால், சுவாமிக்கு தூய்மையான தண்ணீரால் வழிபாடு நடத்த முடியவில்லை.

எனவே தென், மத்திய மாவட்டங்களில் உள்ள கோயில் தெப்பக்குளங்களைத் தூா்வாரி சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

கோயில் தெப்பக்குளங்களைப் பராமரித்து, தூா்வாருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.