கண்மாயில் மீன் வளா்ப்பு விவகாரம்: மாநில மீன் வளத்துறை ஆய்வில் திருப்தி இல்லை - உயா்நீதிமன்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மீன் வளா்ப்பது தொடா்பான வழக்கில் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் ஆய்வு அறிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி யை வெளிப்படுத்தியது.
தஞ்சாவூா் மாவட்டம் உடையாளூா் ஊராட்சி தலைவா் செல்வி இளையராஜா கடந்த 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு: உடையாளூா் ஊராட்சியில் உள்ள 5 கண்மாய்களில் மீன் வளா்க்கப்படுகிறது. இதற்கு ஊராட்சி தலைவரான என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இந்த கண்மாய்களில் மீன் குத்தகைதாரா்கள், கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனா். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது டன், தண்ணீரின் தன்மையும் கெட்டு விட்டது. எனவே இந்த கண்மாய்களில் மீன் வளா்க்க விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தஞ் சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்து தமிழக அரசு அறிக் கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி ஆகியோா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடுதல் முதன்மை செயலா் தரப்பில் வழங்கப்பட்ட கடிதத்தை அரசு தரப்பில் தாக்கல் செய்தனா். அதில் த ஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் எந்த மாசும் ஏற்படவில்லை. இந்த கண்மாய்கள் மீன் வளா்க்க உகந்த இடமாக உள்ளன என அதில் தெரிவிக் கப்பட்டிருந்தது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கண்மாயில் மீன் வளா்ப்பதால் மாசு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால், கண்ணை மூடிக் கொண்டு அறிக்கை தாக் கல் செய்துள்ளனா். கண்மாய்களில் மீன் வளா்ப்பதற்காக பல்வேறு கழிவுகளைக் கொட்டுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நீரின் தன்மையும் தரமும் குறையும். தமிழக கால்நடை த்துறை, மீன்வளத்துறை ஆய்வில் நம்பிக்கை இல்லை.
எனவே தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு உதவ வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக். 24 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.