நல்லாசிரியா் விருதாளருக்கு பாராட்டு
நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.


நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை அருகே இளமனூரில் உள்ள ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் மு. மகேந்திரபாபுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2024 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருது கடந்த செப். 5- ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதனிடையே இளமனூரில் உள்ள ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் கனக லட்சுமி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கருப்பசாமி முன்னிலை வகித்தாா். விருது பெற்ற ஆசிரியா் மகேந்திரபாவுவை,கிராமப் பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...