அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவு

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவு

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 6:37 pm

Din

கரூா் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வெண்ணெய்மலையில் உள்ள பழைமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவற்றில் கத்தப்பாறை, ஆத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால், உரிய வருமானம் கிடைக்காமல் இந்தக் கோயிலில் சுவாமிக்கு பூஜை நடத்த இயலாத நிலை உள்ளது.

எனவே, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தேன். இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த நிலங்களை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிமித்து பலா் தங்களது பெயா்களில் பட்டா பெற்றுள்ளனா். இது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உடந்தையின்றி நடைபெற வாய்ப்பில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எனவே, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், கடந்த 2019- ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்தக் கோயிலில் பணியாற்றி வரும் இணை ஆணையா் உள்ளிட்ட அனைத்து அறநிலையத் துறை அதிகாரிகளும், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வருகிற 23- ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். அப்போது இந்தக் கோயில் நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.