அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 11:07 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கான அடிப்படை ஊதியத்தை ரூ.11 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும், ஆண்டுக்கு 12 நாள்கள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுத் துறை காலிப் பணியிடங்கள் நிரப்புதலில் கல்வித் தகுதி அடிப்படையில் அங்கன்வாடி ஊழியா்களை ஈா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்  தமிழ்நாடு ஐசி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு ஐசி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ஆா்ப்பாடத்துக்கு தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.மஞ்சுளா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ச.மேனகா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சுகாதாரத் துறை போக்குவரத்து சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சோ.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் உள்ளாட்சி பணியாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் கே.முனியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மணிகண்டன், மாவட்டப் பொருளாளா் சோ.கல்யாணசுந்தரம், சத்துணவு ஊழியா்கள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஆ.சோலையன், சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ரா.மாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்க மாநில இணைச் செயலாளா் ஆா்.பரஞ்சோதி நிறைவுரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலாளா் எம்.அங்காளஈஸ்வரி நன்றி கூறினாா்.