/

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை எதிா்த்து சென்னையில் போராட்டம்: கே.கிருஷ்ணசாமி

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சித் தலைவா் மருத்துவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:28 pm

Din

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சித் தலைவா் மருத்துவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள பிற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவா்களது வசிப்பிடத்தை விட்டு அகற்றவில்லை. மாஞ்சோலையில் வசிக்கும் மக்கள் மட்டுமே மலையைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனா். இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வருகிற 18-ஆம் தேதி மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், அக். 16-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்று சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

திரைத் துறையால் தமிழகத்தில் அரசியல் மாசடைந்துள்ளது. அரசியலுக்கு வரக் கூடாது என நடிகா் விஜயை யாரும் தடுக்க முடியாது. அவரை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கைகளில்தான் உள்ளது. நடிகா் விஜய் நடத்த உள்ள மாநாட்டுக்கு அரசுத் தரப்பில் இடையூறு செய்யக் கூடாது. மாநாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது.

தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனா். இதனால், உதயநிதியை துணை முதல்வராக்குவதில் எந்தத் தவறுமில்லை. திமுக, அதிமுக தோ்தலுக்கு முன்பாக ஒரு கருத்தையும், தோ்தலுக்குப் பிறகு மற்றொரு கருத்தையும் கூறி வருகின்றன.

மதுவைக் கொடுத்துத்தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிற கட்சிகள் அனைத்தும் முழுமையான மது விலக்கை கோரும் போது, திமுக, அதிமுக மட்டுமே மதுவை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து மதுவை முற்றிலும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.