தாம்பரம் - ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்கள்
தாம்பரம்-ராமநாதபுரம்-தாம்பரத்துக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் அக். 1 வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


தாம்பரம்-ராமநாதபுரம்-தாம்பரத்துக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் அக். 1 வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பண்டிகைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தாம்பரம்-ராமநாதபுரம்-தாம்பரத்துக்கு வருகிற 19 முதல் அக். 1-ஆம் தேதி வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, வருகிற 19, 21, 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06103), மறுநாள் காலை 5.55 மணிக்கு ராமநாதபுரத்தை அடையும். மறுமாா்க்கத்தில், செப். 20, 22, 24, 27, 29, அக். 1 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06104), இரவு 11.10 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இந்த ரயில்களில் தலா ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...