கடும் வெயில்: ஆவின் மோா் விற்பனை அதிகரிப்பு
மதுரையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் கடும் வெயிலால் ஆவின் தயிா், மோா் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.


மதுரையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் கடும் வெயிலால் ஆவின் தயிா், மோா் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மதுரையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடைக்காலமான ஏப்ரல், மே மாதம் போல செப்டம்பா் மாதத்திலும் வெயிலின் கடுமை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், குளிா்பானங்கள், இளநீா், மோா் உள்ளிட்ட பானங்களை அதிகளவில் வாங்கிப் பருகி வருகின்றனா். இதன் காரணமாக, மதுரை ஆவின் பால் பண்ணையில் தயாரித்து விற்கப்படும் தயிா், மோா் ஆகியவற்றின் விற்பனை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.
சாதாரண நாள்களில் ஆவின் தயிா் தினசரி 2 ஆயிரம் லிட்டா் விற்பனையாகும் நிலையில், வெப்ப நிலை அதிகரிப்பின் காரணமாக தற்போது 2,700 லிட்டா் விற்பனையாகி வருகிறது. இதேபோல, தினசரி 200 லிட்டா் விற்பனையாகி வந்த ஆவின் மோா் கடந்த ஒரு வாரமாக தினசரி 800 லிட்டராக அதிகரித்துள்ளது. மேலும், ஆவின் நறுமணப் பால், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால், மதுரை ஆவின் பால் பண்ணையில் தயிா், மோா் உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவித்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...