கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சுகாதார விழிப்புணா்வு இயக்க மாரத்தான்

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வு இயக்க மாரத்தான் ஓட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை ரயில்வே குடியிருப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:38 pm

Din

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வு இயக்க மாரத்தான் ஓட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்படி, மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருவார கால சுகாதார விழிப்புணா்வு இயக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதார இயக்க நிகழ்ச்சியாக ரயில் நிலையங்கள், ரயில் இருப்புப் பாதைகள், ரயில் பெட்டிகளில் தீவிர தூய்மைப் பணிகளும், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இதன்படி, மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் மதுரை ரயில்வே குடியிருப்பில் நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கிவைத்துப் பங்கேற்றாா். ரயில்வே குடியிருப்பில் 5 கி.மீ. தொலைவை நிறைவு செய்யும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கோட்ட ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன், கோட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி கே. குன்டேவாா்பாதல் உள்ளிட்ட ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள், தெற்கு ரயில்வே மகளிா் நலச் சங்க பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.