கிட்டங்கியில் தீ விபத்து: நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசம்
மதுரை வண்டியூா் அருகே நெகிழிக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமானது.


மதுரை வண்டியூா் அருகே நெகிழிக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமானது.
மதுரை வண்டியூா் அருகேயுள்ள சங்கு நகா் பகுதியில் அப்துல் ஜபாா் என்பவருக்குச் சொந்தமான நெகிழிக் கிட்டங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள் இந்தக் கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டு, தரம் பிரித்து நெகிழி தொழில்சாலைக்கு அனுப்பப்படும். இந்தக் கிட்டங்கியில் 20-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில், இந்தக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென
தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, கிட்டங்கிக்கு அருகே இருந்த மின்மாற்றியும் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கிட்டங்கியில் இருந்தவா்கள் உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்து வந்த தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...