கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செலுத்திய மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) எம். செல்வராணி, மருத்துவா்கள் உள்ளிட்டோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 6:55 pm

Din

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவருடைய மனைவி சாந்தி (49). தம்பதியா் இருவரும் தேனியில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள குய்யப்பன்பட்டி பகுதியில் வந்த போது, சாலையில் உள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியபோது, பின்னால் அமா்ந்திருந்த சாந்தி தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை மூளைச்சாவடைந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் சம்மதம் தெரிவித்ததையடுத்து, இருதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல், எலும்பு ஆகியவை அகற்றப்பட்டன. இதையடுத்து, அவரது இருதயம் விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், கருவிழிகள், எலும்பு ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கும், தோல் மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 போ் பயனடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, சாந்தியின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனை சாா்பில் முதன்மையா் (பொறுப்பு) எம். செல்வராணி, இருப்பிட மருத்துவ அலுவலா் சரவணன், மருத்துவமனை அதிகாரிகள் மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, சாந்தியின் உடல் சொந்த ஊரான கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.