சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குடியரசுத் தலைவா் ஆட்சியைத் திணிக்கும் முயற்சியே ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் -திருமாவளவன்

News image
தொல்.திருமாவளவன்
Updated On :20 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சியைத் திணிப்பதற்கான முயற்சியே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை கோ.புதூா் பேருந்து நிலையப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வருவாய்த் துறையினரால் கடந்த 14-ஆம் தேதி அகற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்தக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கொடிக் கம்பம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளன் கோ.புதூா் பேருந்து நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றினாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையின் மூலம் தேசிய அளவில் சலசலப்பை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும். இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் மூலம் மாநிலங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் ஆட்சியைத் திணிப்பதற்கான முயற்சி என அனைத்துக் கட்சிகளும் அச்சப்படுகின்றன.

மேலும், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை முன்பே சந்தித்து, ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தைக் கைவிட வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது என மனு அளித்தோம்.

மத்திய பாஜக அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு இணைந்து தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

உலகளவில் புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. பெரும்பாலான இனிப்புப் பொருள்கள், உணவுப் பொருள்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதை அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை?

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கொழுப்பு இருக்கக் கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை அரசு வழங்க வேண்டும்.

மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்களது கட்சியின் கோரிக்கை குறித்து போதிய அளவு விளக்கம் கூறப்பட்டுவிட்டது என்றாா் அவா்.