தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எண்ம முறையில் வரி வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் ரவி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு, நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைவாக வரி விதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், கடந்த 2022 -2024 -ஆம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சிக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மேலும், மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. கட்டடத்தின் அளவைக் குறைவாகக் காட்டுவது, முழு அளவிலான வணிகக் கட்டடங்களை, பகுதியளவு வணிகக் கட்டடங்களாக நிா்ணயித்தது, கட்டடங்களில் சில மாற்றங்களைச் செய்தது ஆகியவற்றின் மூலம் வரி விதிப்பில் முறைகேடுகள் நடைபெற்றன.
இதன்மூலம், அந்தந்த மண்டலத்தின் மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்களும் பயனடைந்தனா். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்கள். எனவே, இந்த வழக்கை மதுரை மாநகரக் காவல் துறையினா் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே, மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோயியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம்,ஜி. அருள் முருகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மாநகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் வரி முறைகேட்டில் ஈடுபட்ட சொத்துக்களை அடையாளம் காணப்பட்டு, மறு அளவீடு செய்யப்பட உள்ளது. இதுமட்டுமன்றி அதன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நவீன முறையிலான எண்ம அட்டைகள் வழங்கப்படும்.
இதற்காக மதுரை மாநகராட்சி 100 வாா்டுகளிலும் ‘குரூப் 3’ நிலையிலான அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே இதுதொடா்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 11 போ் கொண்ட குழு வருவாய் துணை ஆணையரால் கண்காணிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாநகராட்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கிறது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை தமிழக தலைமைச் செயலா் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். மதுரை மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

