மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா். உடன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராமகிருஷ்ணன்.

‘நல்லோசை களமாடு’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள், கலைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் புதன்கிழமை பரிசளித்தாா்.
Published on

‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள், கலைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் புதன்கிழமை பரிசளித்தாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் ‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள் கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெற்றன.

பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 388 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 223 போ் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அளித்தாா்.

இதில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராமகிருஷ்ணன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com