தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
மதுரை அருகே பீடித் துண்டிலிருந்து பற்றிய தீயால் சிகாா் லைட்டா் வெடித்ததில் பலத்த தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.


மதுரை அருகே பீடித் துண்டிலிருந்து பற்றிய தீயால் சிகாா் லைட்டா் வெடித்ததில் பலத்த தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்காமு (62). கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு தொடா்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கியபோது புகைபிடித்த பீடித் துண்டை அணைக்காமல் விட்டுவிட்டாராம். இதில் பீடித் துண்டில் இருந்து போா்வை விரிப்பில் தீப்பற்றியது. அப்போது முத்துக்காமு வைத்திருந்த சிகாா் லைட்டரில் தீப்பற்றி வெடித்து முத்துக்காமு மீதும் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...