சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (40). இவரது மனைவி விஜயலட்சுமி (36). விவசாய கூலித் தொழிலாளியான பாலமுருகன் வைக்கோல் வியாபாரமும் செய்து வந்தாா். மேலும், வைக்கோல் வியாபாரத்துக்காக உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டி விலக்குப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வியாபாரம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் எதிரே உள்ள கடைக்கு கணவன், மனைவி இருவரும் சென்றுவிட்டு மீண்டு வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இருவா் மீதும் மோதியது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சரக்கு வாகன ஓட்டுநா் மீது உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...