கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
மதுரை வாடிப்பட்டி அருகே தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:10 pm

மதுரை வாடிப்பட்டி அருகே தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த வெங்கிடசாமி மனைவி புஸ்பம் (74). இவா் புதன்கிழமை துணிகள் துவைப்பதற்காக இந்தப் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். இவரது சப்தம் கேட்டு அந்தப் பகுதியினா் கிணற்றில் விழுந்த புஸ்பத்தை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...