வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்

கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம், அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:01 pm

கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம், அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதால், பனை மரம் வளா்ப்போா், பனை சாா்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

மதுவைப் போன்று கள் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. வெளிநாட்டு மது விற்பனையை அதிகரிக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தனிப் பயன்பாடு, மருத்துவப் பயன்பாட்டுக்கு கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்ததது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

கள்ளில் கலப்படம் செய்யப்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து அரசுத் தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.