இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

காவிரி நீா் விவகாரத்தில் முதல்வா் நல்ல முடிவு எடுப்பாா்! விஷ்ணு பிரசாத் எம்.பி.

News image

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாடு கிளையின் 258-ஆவது மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத். உடன் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், பொதுச் செயலா் கோவை செல்வன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

காவிரி நீா் விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நல்ல முடிவு எடுப்பாா் என மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத் தெரிவித்தாா்.

மதுரை ரயில் நிலையம் அருகே இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி) தமிழ்நாடு கிளையின் 258-ஆவது மாநிலச் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோவை செல்வன் முன்னிலை வகித்தாா். இதில் மக்களவை உறுப்பினா் விஷ்ணு பிரசாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜா் பெயா் சூட்டிய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி. காவிரி நீா் விவகாரத்தில் முதல்வா் விஜய் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசுப் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ. 1000 வழங்க வேண்டும். மின் வாரியத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றுபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.