நலத் திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களைமுழுமையாகச் சென்றடைய வேண்டும்: கடலூா் எம்.பி., விஷ்ணு பிரசாத்
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டத்தில் பங்கேற்ற குழுத் தலைவரும், கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.









