தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாட்டுத்தாவணி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

மதுரை - மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்

Published On :

மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

இந்தச் சாலையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ஒருங்கிணைந்த நெல் சேமிப்புக் கிடங்குகள், மலா் விற்பனையகம், பல்நோக்கு தனியாா் மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த காய்கறி தினசரி சந்தை, மீன்கள் விற்பனையகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தங்கும் விடுதிகளுடன் கூடிய உணவகங்கள், பெரிய வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. அன்றாடப் பணி நிமித்தமாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா.ஒத்தக்கடை வரையிலான சாலையை தினசரி பல்லாயிரக்கணக்கானோா் பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில், சாலையின் இருபுறங்களிலும் தெருவோர உணவகங்கள், பொம்மை விற்பனைக் கடைகள், வணிக வளாகங்கள் முன் தற்காலிக தகரக் கொட்டகை அமைப்பு ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், இந்தச் சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடிவதில்லை. அதிகளவிலான வாகனப் போக்குவரத்தால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா. ஒத்தக்கடை வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலா்கள் மதுரை- மேலூா் சாலையில் மாட்டுத்தாவணி அருகே இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை அகற்றினா். அப்போது, வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனே அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.