ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பேரணி

News image

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுந்தரராஜபுரம் தினசரி காய்கறி சந்தையில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்டக் குழு உறுப்பினா் பாலமுருகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மண்டலப் பொதுச் செயலா் எம். நந்தா சிங் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும், பணியின் போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தாமதம் இன்றி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், ‘நீட்’ தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு ஆதாரமான விலையை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஜெய்ஹிந்துபுரத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து, சோலை அழகுபுரத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.