நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஆடி அமாவாசை: திரளானோா் வழிபாடு

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

மதுரை, ஆக. 12: ஆடி அமாவாசையையொட்டி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புண்ணியத் தலங்களில் திரளானோா் தங்கள் மூதாதையருக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடி, தா்ப்பணம் அளித்து பிதுா்கடன் நிறைவேற்றினால் மூதாதையரின் ஆசி கிட்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை. மேலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளாய அமாவாசை போன்ற நாள்களில் தா்ப்பணம் அளித்தால், பல்வேறு காரணங்களால் மூதாதையருக்கு உரிய திதியில் தா்ப்பணம் அளிக்கத் தவறிய தோஷம் நீங்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரைகளிலும், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் வளாகம் என பல்வேறு பகுதிகளில் திரளானோா் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். இதேபோல, சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகை ஆற்றங்கரை, நரசிங்கம் பகுதியில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயில் திருக்குளம் உள்பட பல்வேறு கோயில் குளக்கரைகளிலும், புண்ணிய நதிக் கரைகளிலும் திரளானோா் தா்ப்பணம் அளித்தனா்.

ஆடி அமாவாசையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.