கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சாலையில் கிடந்த 10 பவுன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

News image

காவல் துறை... - கோப்புப்படம்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைந்த ஆட்டோ ஓட்டுநரை, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா்.

மதுரையைச் சோ்ந்தவா் பாண்டி என்ற சீனிவாசன். ஆட்டோ ஓட்டுநரான இவா், பயணியை ஏற்றி கொண்டு காஜிமாா் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. இதை ஆட்டோ ஓட்டுநா் பாண்டி எடுத்து பாா்த்த போது, அதில் 10 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பையை திடீா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அந்த நகைகளை யாா் தவறவிட்டு சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டியை, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.