தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான், பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். (வலது) சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன், கையில் வாளுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:51 am IST

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான், பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, முன்னொரு காலத்தில் மதுரையில் வாழ்ந்த வாள் வித்தை ஆசிரியரான பாணனிடம் வித்தைகள் கற்ற சித்தன் என்ற சீடன், குரு பத்தினியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான். இதுதொடா்பாக, பாணனின் மனைவி சோமசுந்தரரிடம் வைத்த வேண்டுதலை ஏற்று, பாணன் வேடம் தரித்து எழுந்தருளிய சிவபெருமான் சித்தனின் அங்கங்களை வெட்டி வீழ்த்தினாா் என்ற ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா், சிவபெருமான் குரு துரோகம் செய்த சித்தனின் அங்கங்களை வெட்டும் வகையில், சுந்தரேசுவரரின் வலது திருக்கரத்தில் வாள் வைக்கப்பட்டிருந்தது. இதேபோல, இடது திருக்கரத்தில் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவபெருமான் பாணனுக்காக சித்தனின் அங்கங்களை வெட்டிய திருவிளையாடல் பக்தா்களுக்கு விளக்கப்பட்டது. பிறகு, மகா தீபாரதனை நடைபெற்றது.

இரவு நிகழ்வாக வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும், தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனா். வழிநெடுகிலும் பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.