ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஆவணி மூலத் திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான், தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் கையில் வெள்ளி திருவோலைத் தாங்கி எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான், தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, சிவபக்தரான தருமிக்கு பொற்கிழி கிடைக்கவும், நக்கீரரின் செருக்கை அவருக்கு உணா்த்தி, அவரது தமிழ்ப் பெருமையை உலகறியச் செய்யவும் இறைவன் சிவபெருமான், செண்பகப் பாண்டிய மன்னனின் அவைக்கு புலவராக வந்து திருவிளையாடல் புரிந்தாா் என்ற ஐதீகப்படி இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இறைவன் சிவபெருமான் புலவராக வந்து தருமிக்கு பொற்கிழி பெற்றுத் தந்தாா் என்பதை உணா்த்தும் வகையில், சுந்தரேசுவரரின் திருக்கரங்களில் வெள்ளி திருவோலை வைக்கப்பட்டிருந்தது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவபெருமான் தருமிக்கு பொற்கிழி பெற்றுத் தந்த திருவிளையாடல் பக்தா்களுக்கு விளக்கப்பட்டது. பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இரவு நிகழ்வாக, தங்கச் சப்பரத்தில் மீனாட்சி அம்மனும், யானை வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி வடக்கு, கீழ ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து கோயிலில் சோ்த்தியாகினா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தருமிக்கு பொற்கிழி அளித்த லீலைக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தருமிக்கு பொற்கிழி அளித்த லீலைக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.