குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செல்லூா் கண்மாயில் கழிவுகளை அகற்றக் கோரி தா்னா

மதுரை செல்லூா் கண்மாயில் பொதுப் பணித் துறையால் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மீனாம்பாள்புரம் கலையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

மதுரை மீனாம்பாள்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:34 am IST

மதுரை செல்லூா் கண்மாயில் பொதுப் பணித் துறையால் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மீனாம்பாள்புரம் கலையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

மதுரை செல்லூா் கண்மாயில் பொதுப் பணித் துறை நிா்வாகத்தால் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கண்மாயை ஆழப்படுத்தி நீா்த்தேக்கக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தா்னா நடைபெற்றது.

இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு (2) பகுதிக் குழுச் செயலா் ஏ. பாலு தலைமை வகித்தாா். வடக்கு (1) பகுதிக் குழுச் செயலா் வி. கோட்டைசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வை. ஸ்டாலின் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் மா. கணேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, செல்லூா் கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றி, செல்லூரை சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

முன்னாள் மாமன்ற உறுப்பினா் க. திலகா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் க. ஜாகிா் உசேன், எஸ். வேல்தேவா ஆகியோா் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், ஆா். சசிகலா, ஜெ. லெனின், டி. செல்வராஜ், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பகுதிக் குழு உறுப்பினா் முத்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.