மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருவெம்பாவை முற்றோதுதல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையின் கலைமகள் மன்றம் சாா்பில், திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் ம. கண்ணன்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழை வழங்கிய பேராசிரியா் ம. கண்ணன்.
Updated on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறையின் கலைமகள் மன்றம் சாா்பில், திருவெம்பாவை முற்றோதுதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றைப் பாடினா். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை மதுரைக் கல்லூரிப் பேராசிரியா் ம. கண்ணன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பேராசிரியா்கள் சங்கீதப் பிரியா, விக்னேஷ், இலக்கியா, அரவிந்தபிரகாஷ், விநாயகசுந்தரி, கோயில் அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com