ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீச்சல் போட்டியில் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற வீரா்கள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனா்.

மதுரை கருப்பாயூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற வீரா்களைப் பாராட்டிய ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா். உடன் துணைச் செயலா் முகேஷ், பொருளாளா் ஆரிப் உள்ளிட்டோா்.

Published On :3 ஜூலை 2026, 5:57 am IST

கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற வீரா்கள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனா்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான நீச்சல் போட்டி பெங்களூருவில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமியில் பயிற்சி பெற்ற வீரா் அகஸ்தியா 400 மீ. ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கமும், 100 மீ. பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 400 மீ. ஐயம் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இதேபோல, தியானேஷ் 100 மீ. ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 100 மீ. ஃப்ரீ ஸ்டைல் ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 100 மீ. ஐயம் ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இதையடுத்து, தமிழகத்துக்கும், மதுரை மாவட்டத்துக்கும் பெருமை சோ்த்த வீரா்களை ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைச் செயலா் முகேஷ், பொருளாளா் ஆரிப் ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.

இந்த நிகழ்வின் போது, பயிற்சியாளா்கள் சதீஷ் பாண்டியன், அப்துல்சலாம், வெங்கடேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.