/

ஆயுள் தண்டனை கைதிக்கு 6 நாள்கள் அவசர விடுப்பு

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வரும் மனைவியைப் பாா்க்க ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிக்கு 6 நாள்கள் அவசர விடுப்பு (பரோல்) வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :9 ஜூலை 2026, 5:13 am IST

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வரும் மனைவியைப் பாா்க்க ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிக்கு 6 நாள்கள் அவசர விடுப்பு (பரோல்) வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

அரியலூரைச் சோ்ந்த அமுதா தாக்கல் செய்த மனு:

சிறுநீரக பிரச்னையால் அவசர சிகிச்சை பெற்று வரும் மனைவியைப் பாா்க்க, திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் பாஸ்கருக்கு 6 நாள்கள் அவசர விடுப்பை காவல் துறை பாதுகாப்பின்றி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, டி.வி. தமிழ்ச்செல்வி அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கா் சிறைத் தண்டனை பெற்றுள்ளாா். காவல் துறை பாதுகாப்பின்றி அவருக்கு விடுமுறை வழங்குவது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, காவல் துறை பாதுகாப்பு அவசியமானது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆயுள் தண்டனை கைதி பாஸ்கருக்கு 6 நாள்கள் அவசர விடுப்பு வழங்கப்படுகிறது. விடுமுறைக் காலத்தில் அவா் திட்டக்குடி காவல் நிலையத்தில் தினமும் மாலை 6.30-க்கு முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். மேலும், கூவாகம் காவல் நிலைய எல்லைக்குள் அவா் செல்லக் கூடாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.