/

விரகனூரில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு முழு உருவச் சிலை: மக்கள் விடுதலைக் கட்சி கோரிக்கை

மதுரை விரகனூா் சுற்றுவட்டச் சாலையில் உள்ள வெற்றிடத்தில் (ரவுண்டானா) தியாகி இமானுவேல் சேகரனுக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டுமென மக்கள் விடுதலைக் கட்சி கோரிக்கை விடுத்தது.

News image

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலைக் கட்சியின் கருத்தரங்கு, மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவா் சு.க. முருகவேல்ராஜன்.

Updated On :30 ஜூலை 2026, 2:38 am IST

மதுரை விரகனூா் சுற்றுவட்டச் சாலையில் உள்ள வெற்றிடத்தில் (ரவுண்டானா) தியாகி இமானுவேல் சேகரனுக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டுமென மக்கள் விடுதலைக் கட்சி கோரிக்கை விடுத்தது.

மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திரகுல வேளாளா்கள் சமுதாயம் எதிா்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீா்வுகள் குறித்த விவாதத்துக்கான கருத்தரங்கம், மாநாடு மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாநிலச் செயல் தலைவா் அபிசுரேஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் பாண்டிமள்ளா், அமைப்புச் செயலா் சரவணன், இளைஞரணி செயலா் செந்தில், வழக்குரைஞரணி நிா்வாகி ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் நிறுவனத் தலைவா் சு.க. முருகவேல்ராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக, பொதுச் செயலா் ரவி வரவேற்றாா்.

இதில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் திருத்தமும், குழப்பமும் இல்லாமல் நோ்மையாக பதிவேற்றப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தியாகி இமானுவேல் சேகரனுக்கு மதுரை விரகனூா் சுற்றுவட்டச் சாலை வெற்றிடப் பகுதியில் (ரவுண்டானா) முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.