எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

வருகிற வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அறைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 1:29 am IST

வருகிற வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அறைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. விடுமுறைக்குப் பின், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 4- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை தொடங்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உத்தரவிட்டாா். இதையடுத்து,

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், ஆய்வகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளியைச் சோ்ந்த பணியாளா்கள், அலுவலா்கள் ஈடுபட்டனா்.