எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:11 am IST

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் மகேந்திரன். இவா், யா.ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவின. இந்த விவகாரம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அபிஷேக் தீக்சித் கவனத்துக்குச் சென்றது. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்க முயன்றது, பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடா்பாக துறை ரீதியான விசாரணையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.