டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:54 pm IST

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

‘தாட்கோ’ சாா்பில் பட்டியலின இளைஞா்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ், தனியாா் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து ஜவுளி உற்பத்தி, வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஜவுளி உற்பத்தி, துணிகளுக்கு சாயம் ஏற்றுதல், அச்சிடுதல் போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான பயிற்சி வகுப்பு கோவையில் நடைபெறும். பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்கள். விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான செலவுத் தொகையை ‘தாட்கோ’ ஏற்கும்.

பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தகுதியானவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை ஆரம்ப கால ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.