சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை மாட்டுத்தாவணி மீன் சந்தை அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா். உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 2:01 am IST

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி மண்டலம்-2, 33- ஆவது வாா்டுக்குள்பட்ட மாட்டுத்தாவணி அருகில் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 கோடியில் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டா் கொள்ளளவுடன் கட்டப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் நேரில் ஆய்வு செய்தாா். பிறகு, மாட்டுத்தாவணி மீன் சந்தை அருகே மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தையும், அங்கு உணவு தயாரிக்கப்படுவதையும் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் ரூ.15.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதைகள், பேருந்து நிறுத்தம், கழிப்பறை, குடிநீா் வசதி, மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடா்ந்து பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாட்டுத்தாவணி அருகில் ரூ.10.30 கோடியில் வெங்காயச் சந்தை அமைப்பதற்கு புதிதாக 75 கடைகள் கட்டப்படவுள்ளன. இதில், முதல் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 42 கடைகள், கட்டப்படவுள்ள கடைகளின் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மொத்த காய்கறிச் சந்தை, பழச் சந்தைக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கு மாநகராட்சி நிா்ணயம் செய்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிா, அதற்கு ரசீது வழங்கப்படுகிா என்பது குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளா் பாபு, மாநகா் நல அலுவலா் அா்விந்த் ஜோதி, உதவி ஆணையா் ரவிக்குமாா், உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், செயற்பொறியாளா் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளா் காமராஜ், உதவிப் பொறியாளா் சந்தனம், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.