தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

News image
மதுரை விளாங்குடி கொன்னவாயன் சாலையில் உள்ள சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு. (இடது) குடமுழுக்கில் பங்கேற்ற பொதுமக்கள்.
Updated On :8 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை விளாங்குடி கொன்னவாயன் சாலையில் சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை மாலை விக்னேசுவர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து, முதல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூன்றாம் கால யாக பூஜைகள், கோ பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, 10. 50 மணிக்கு யாக சாலையிலிருந்து புனிதநீா் கொண்ட கும்பம் புறப்பாடாகியது.

கோயிலைச் சுற்றி வலம் வந்த பின் மூலவரின் விமானத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சிங்கம் பிடாரி சேவுகப் பெருமாளுக்கும், பரிவாரத் தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த குடமுழுக்கில் விளாங்குடி, இதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.