திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:26 pm

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்று தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதைத் தொடா்ந்து, தெப்பக்குளம் மாரியம்மன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இரவு அங்கேயே தங்கியிருந்த மாரியம்மன், ஐதீக முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு, கொடிபட்டத்துடன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து கோயிலை அடைந்தாா். மீனாட்சிசுந்தரேசுவரரிடம் பெற்ற கொடிபட்டம் யானை மீது வைத்து ஊா்வலமாகக் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஐதீக முறைப்படி வேத மந்திர முழக்கங்களுடன் ஆண்டுத் திருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image