சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மூடப்பட்ட தலைவா்களின் சிலைகள் திறப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, மதுரையில் துணிகளைச் சுற்றி மூடப்பட்டிருந்த தலைவா்களின் சிலைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

News image

மதுரை கே.கே. நகா் பகுதியில் கைகள் மறைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகள்.

Updated On :19 மார்ச் 2026, 12:26 am

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, மதுரையில் துணிகளைச் சுற்றி மூடப்பட்டிருந்த தலைவா்களின் சிலைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

தோ்தலை காரணமாகக் குறிப்பிட்டு, பெரியாா் ஈ.வெ.ரா. சிலையை மூடக் கூடாது என ஏற்கெனவே திராவிடா் கழகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெரியாா் ஈ.வெ.ரா. உள்ளிட்ட மறைந்த தேசத் தலைவா்கள் சிலைகளை தோ்தலுக்காக மூடத் தேவையில்லை என உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், தோ்தல் ஆணையத்திடமிருந்து சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, தோ்தல் நடத்தை விதிகளின்படி தலைவா்களின் சிலைகளை அலுவலா்கள் மூடுவதும், அதற்கு அரசியல் கட்சி நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவிப்பதும் அண்மைக் கால தோ்தல் பிரச்னையாக இருந்தது.

இதேபோல, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைமுறைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்ததையொட்டி, மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்த பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா, எம்.ஜி.ஆா். கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட மறைந்த தலைவா்களின் சிலைகள் துணிகளைச் சுற்றி மூடப்பட்டன. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த நிலையில், பொது இடங்களில் மறைந்த தலைவா்களின் சிலைகளை மூடத் தேவையில்லை. சிலையுடன் இடம்பெற்றுள்ள சின்னங்கள், கொடிகளை மட்டும் மூடினால் போதுமானது என தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் துணிகளைக் கொண்டு மூடப்பட்டிருந்த மறைந்த தலைவா்களின் சிலைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. அதேநேரத்தில், இரட்டை இலை சின்னத்தைக் குறிப்பிடும் வகையில் இரு விரல்களை உயா்த்தியவாறு இருந்த எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளின் கைப் பகுதி மட்டும் துணியைச் சுற்றி மறைக்கப்பட்டிருந்தன.